போலீஸ் சோதனை சாவடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தொண்டி அருகே போலீஸ் சோதனை சாவடியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-12 17:06 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீரசங்கிலி மடம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி போலீஸ் சோதனை சாவடி கட்டிடம் உள்ளது. முன்பு அங்கு ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

தற்போது அந்த கட்டிடம் பயன்பாடு இன்றி கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும், திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஷ் மற்றும் வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தினர்.

தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல், திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண் யார், தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்