கணவனின் குடிப்பழக்கத்தால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கணவனின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-21 17:33 GMT

அரக்கோணம்

கணவனின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தக்கோலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். பூ கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சவுந்தர்யா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கு குடி பழக்கம் இருப்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சரவணன மது அருந்தி வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சவுந்தர்யா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கோலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்