தூக்குப்போட்டு பெண் தற்கொலை

திருவாடானை அருகே 2 திருமணம் நடந்தும் குழந்தை இல்லாததால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-21 17:24 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 59). இவருடைய மகள் சார்ஜிதா பேகம்(28). இவருக்கு அதே ஊரை சேர்ந்த ஒருவருடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் கணவரை அவர் விவகாரத்து செய்தார்.

அதன்பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த வேறு ஒருவருக்கு அவரை திருமணம் செய்து கொடுத்துள்ளார். 2-வது திருமணம் செய்தும் அவருக்கு குழந்தை இல்லை. இதனால் விரக்தியில் காணப்பட்டார். இந்த நிலையில் தனது தாயார் வீட்டுக்கு வந்த சார்ஜிதா பேகம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த எஸ்.பி. பட்டினம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக முகமது இஸ்மாயில் எஸ்.பி. பட்டினம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்