இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நாகர்கோவில் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-05 19:06 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் அருகே உள்ள பள்ளத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 35). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனலட்சமிக்கு உடல்நலம் சரியில்லாததால், கடந்த சில நாட்களாக நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள தாயார் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தனலட்சுமி நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்