குழந்தை பாக்கியம் இல்லாததால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை..!

நாமக்கல் அருகே இளம்பெண் திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-29 13:14 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50), பெயிண்டர் .இவரது மகள் நளினியை (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசக்கல்பட்டி, இளங்கோநகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நளினிக்கு குழந்தைகள் இல்லாததால், அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெகு நேரமாகியும் வீட்டைவிட்டு நளினி வெளியே வரவில்லை.

இதனால் வீட்டிற்கு அருகே இருந்தவர்கள்‌‌ அங்கு சென்று பார்த்துள்ளனர்.‌ உள்பக்கம்‌ கதவு சாத்தப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து‌ உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நளினி சேலையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து வேகவுண்டம்பட்டி‌ போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் நளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்