எலி மருந்தை தின்று பெண் தற்கொலை

நாகூரில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-22 17:12 GMT

நாகூர்:

நாகூர் கீழபட்டினச்சேரி ஆரியநாட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி மதியரசி (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. மணிகண்டனுக்கும், அவரது சகோதரிகளுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சொத்து பிரச்சினை ஏற்பட்டது.இதில் மணிகண்டன் தாக்கப்பட்டார். இதை தொடர்ந்து மதியரசி தனது தாயார் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். இந்த நிலையில் மதியரசி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து தின்று விட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

Tags:    

மேலும் செய்திகள்