விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-10 19:03 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆ.புதூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கரின் மனைவி ராஜகுமாரி(வயது 24). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவதன்று கடுமையாக வயிற்று வலி ஏற்படுவதாக பாஸ்கருக்கு போன் செய்து கூறியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஏலாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்