விஷம் தின்று பெண் தற்கொலை

விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-18 21:15 GMT

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் ஹரிணி(வயது 24). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்க்க அவரது தந்தை முடிவு செய்தார். ஆனால் திருமணத்தில் விருப்பமில்லாததால் ஹரிணி எலி மருந்தை(விஷம்) தின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்