நடுரோட்டில் கணவர் அடித்ததால் பெண் தற்கொலை

நடுரோட்டில் கணவர் அடித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-25 18:53 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள வடக்கு மலையடிப்பட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஜானகி என்பவரின் மகள் காளீஸ்வரி (வயது 26). இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளீஸ்வரி கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இந்நிலையில் காளீஸ்வரிக்கு வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரை 2020-ல் 2-வது திருமணம் செய்து வைத்தனர். இவர்கள் இருவரும் தொண்டி அருகே வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காளீஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை கவனித்து கொள்வதற்காக சில நாட்களுக்கு முன்பு தாய் ஜானகி வீட்டுக்கு வந்துள்ளார். இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்த காளீஸ்வரி உணவு வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது அங்கு ஆனந்த் குடிபோதையில் நடுரோட்டில் மனைவியை அடித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த காளீஸ்வரி தாயாரிடம் நடந்ததை கூறி வருத்தப்பட்டார். பின்னர் வீட்டுக்கு சென்றவர் பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜானகி அளித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்