கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-09-20 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ஆ.மருதப்பபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகையா மனைவி லட்சுமி (வயது 52). இவர் வீட்டில் மதுபாட்டில்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆ.மருதப்பபுரம் சென்ற போலீசார் லட்சுமி வீட்டில் சோதனையிட்டபோது, மது பாட்டில்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்