ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அய்யம்பட்டி தெரு அருகே கஞ்சா விற்றதாக லட்சுமி (வயது 48) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.