ஒயர் திருடிய பெண் கைது
ஏளூர் அருகே ஒயர் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அடுத்த ஏளூர் அருகே பெரும்பாலளிப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 71). கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை 11 மணியளவில் இவரது கோழிப்பண்ணை அருகே உள்ள மோட்டாருக்கு செல்லும் 10 மீட்டர் நீளமுள்ள கேபிள் ஒயரை பெண் ஒருவர் அறுத்து திருடியதாக கூறப்படுகிறது. இதை கண்ட ராமலிங்கம் மற்றும் சிலர் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் படிவச்சேரி முருகன் கோவில் தெருவை சேர்ந்த சங்கீதா (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ஒயரை பறிமுதல் செய்த போலீசார், சங்கீதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.