பெண் கைது
வள்ளியூரில் பெண்ணை தாக்கியதாக மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.
வள்ளியூர் தெற்கு:
வள்ளியூரை சேர்ந்த தனபால் என்பவருடைய மனைவி காயத்ரி (வயது 40). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பூல்பாண்டியின் மனைவி கலா (40) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கலா, காயத்ரியின் வீட்டு கதவை திறந்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட காயத்ரியை, கலா அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காயத்ரி வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கலாவை கைது செய்தார்.