மது விற்ற 19 பேர் கைது
தஞ்சை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் மது விற்ற 19 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் மது விற்ற 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோதமாக விற்பனை
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை தொடர்ந்து அவர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அந்தந்த சரகங்களில் தீவிர சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் தஞ்சை மாநகரம், மருங்குளம், ஏ.ஒய்.ஏ. சாலை, பனவெளி வெட்டாறு பாலம், காமராஜர் நகர், சாலியகுளக்கரை, தெற்கு வீதி, கண்டியூர் மெயின் சாலை உள்ளிட்ட டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.
19 பேர் கைது
அதில் 7 இடங்களில் டாஸ்மாக் கடைகளின் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மது விற்ற 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் கும்பகோணம் மற்றும் பட்டுக்கோட்டை போலீசார் சாலியமங்கலம் பகுதியில் தலா 2 இடத்திலும், பூண்டி பாலம், திருக்கோவில் பத்து, நல்லவன்னியன் குடிகாடு, கும்பகோணம் புதிய பஸ் நிலையம், ஒரத்தநாட்டில் டாஸ்மாக் கடைகள் உள்ள 6 இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அதில்12 இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் சட்டவிரோதமாக மதுவிற்ற 12 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுவிற்ற 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.