காரில் கடத்திவரப்பட்ட ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

நன்னிலம் அருகே காாில் கடத்திவரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது ெதாடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டன

Update: 2023-05-03 19:00 GMT

நன்னிலம், மே.4-

நன்னிலம் அருகே காாில் கடத்திவரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது ெதாடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பகுதியில் பேரளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் காரில் அட்டை பெட்டிகளில் மது பாட்டில்களும்பைகளில் சாராயம் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காாில் இருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர்கள் கொல்லுமாங்குடி அருகே உள்ள சக்கரமங்கலம் பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது29), வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மணிக்குமார்( 31) என்றும் அவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. மணிக்குமார், அன்பரசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் சாராயம், கார் ஆகியவற்ைற பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்