திருவாரூர் கல்பாலத்தில் வாகன விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் உள்ள திருவாரூர் கல்பாலத்தில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-05 18:45 GMT

போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல் உள்ள திருவாரூர் கல்பாலத்தில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

போக்குவரத்து சிக்னல்கள்

திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையினால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துகள் ஏற்பட்டுவதை தடுத்திடவும், போக்குவரத்தை சீரமைத்திடவும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன.

தொடக்கத்தில் சிக்னல் விளக்குகள் எரிந்து போலீசாரால் போக்குவரத்தினை சீரமைத்து வந்தனர். ஆனால் கால போக்கில் இந்த சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. இந்த கம்பங்கள் ெசயல்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது.

வேகத்தடை அமைக்க வேண்டும்

குறிப்பாக தஞ்சை சாலை கல்பாலம் பகுதியில் நாகை, தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிக்கு செல்லும் பிரிவு சாலைகள் உள்ளன. இங்கு அதிகமாக வாகன போக்குவரத்து நெருக்கடி உள்ளதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த கல்பாலத்தில் வாகன விபத்தை தடுத்திட வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் இந்த இடத்தில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்