மூன்று பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

மூன்று பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-07-31 18:45 GMT

கூத்தாநல்லூரில் மூன்று பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூன்று பிரிவு சாலை

கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் பாய்க்காரத்தெரு பாலம் உள்ளது. இந்த பாய்க்காரத்தெரு பாலத்தை மையமாக கொண்டு கூத்தாநல்லூர் சாலை, வடபாதிமங்கலம் சாலை, லெட்சுமாங்குடி சாலை என மூன்று பிரிவு சாலைகள் உள்ளன. மன்னார்குடி, திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல், கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் ஏனைய ஊர்களுக்கும், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த மூன்று பிரிவு சாலைகளில் சென்று வருகின்றன.

வாகன விபத்துகள்

இந்த மூன்று பிரிவு சாலையிலும் ஓரே நேரத்தில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் வேகமாக சென்று எந்த பிரிவு சாலையில் திரும்புகிறது என்றும் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடும் நிலை ஏற்படுவதுடன் கண் இமைக்கும் நேரத்தில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.

பாய்க்காரத்தெரு பாலம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம், கடைவீதி, பஸ் நிறுத்தம் ஆகியவை மக்கள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. எனவே வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்த மூன்று பிரிவு சாலையின் முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்