நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-08-04 18:45 GMT

வடபாதிமங்கலத்தில் நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு பிரிவு சாலை

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகாமையில் கூத்தாநல்லூர் செல்லும் சாலை, சேந்தங்குடி செல்லும் சாலை, உச்சுவாடி செல்லும் சாலை, வடபாதிமங்கலம் பஸ் நிலையம் செல்லும் சாலை என நான்கு பிரிவு சாலை உள்ளது. இந்த நான்கு பிரிவு சாலையில் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், சேந்தங்குடி செல்லும் சாலையில் அரசு-தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.

வேகத்தடை வேண்டும்

உச்சுவாடி அங்கன்வாடி பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், வழிபாட்டு தலங்கள், கடைவீதி, பஸ் நிலையம் மற்றும் ஏனைய இடங்களுக்கு சென்று வரக்கூடிய கிராம மக்கள் இந்த நான்கு பிரிவு சாலைகளையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நான்கு பிரிவு சாலையிலும் ஒரே நேரத்தில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. ஆபத்தான வளைவு உள்ள போதிலும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் இடமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சம் அடைகின்றனர். எனவே ஆபத்தான வளைவு உள்ள நான்கு பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்