சிவகாசிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்தப்படுமா?
சிவகாசிக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி
சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையில் இருந்து 16 கி.மீ. தொலைவு சிவகாசி வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பணிகள் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. திடீரென பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்படுகின்றன. வெம்பக்கோட்டை அணையில் இருந்து தற்போது 6 கி.மீ. தொலைவில் உள்ள மடத்துப்பட்டி வரை குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுள்ளது. சிவகாசிக்கு இன்னும் 10 கி.மீ. வரை குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது. ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதால் சிவகாசி மாநகராட்சி மக்களுக்கு முழுமையாக குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.