பஸ் நிலையத்தில் போக்குவரத்து விசாரணை அலுவலகம் திறக்கப்படுமா?
பஸ் நிலையத்தில் போக்குவரத்து விசாரணை அலுவலகம் திறக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கான பொது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு பயணிகள் வசதிக்காக பஸ் செல்லும் நேரம், வரும் நேரம் கூறுவதற்கு என ஒரு விசாரணை அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது அதிகாரிகள் யாரும் இல்லாததால் அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் யாரிடம் பஸ்கள் குறித்து விசாரிப்பது என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த விசாரணை அறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.