உயர்கோபுர மின் விளக்கு ஒளிருமா?
கீழையூர் அருகே மேலப்பிடாகையில் உயர்கோபுர மின் விளக்கு ஒளிருமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கீழையூர் அருகே மேலப்பிடாகையில் உயர்கோபுர மின் விளக்கு ஒளிருமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலப்பிடாகை
நாகை மாவட்டம் கீழையூர் அருகே மீனம்பநல்லூர் ஊராட்சி மேலப்பிடாகை கிராமம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும்.
சோழவித்யாபுரம், திருக்குவளை, வாழக்கரை, கீழையூர், தண்ணிலபாடி, இறையான்குடி, பாலகுறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு அலுவல் பணிகளுக்காக இங்கிருந்து பஸ் மூலம் நாகை, திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.
பெண்கள் அச்சம்
இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் பெண்கள் ஏராளமானோர் மேலப்பிடாகை வழியாக தங்கள் ஊர்களுக்கு செல்கின்றனர். மேலப்பிடாகை கடைத்தெருவில் சூரிய ஒளியில் இயங்கும் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது.
இந்த மின் விளக்கு சரிவர ஒளிராததால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் இயல்பாக நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இரவில் வெளிச்சமின்றி பெண்கள் அந்த பகுதிக்கு செல்வதற்கே அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு உள்ள உயர்கோபுர மின் விளக்கை உடனடியாக ஒளிரச்செய்ய வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.