கழிவுநீர் அகற்றப்படுமா?

கழிவுநீர் அகற்றப்படுமா?;

Update:2022-06-17 01:24 IST

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காட்டுக்குறிச்சி கிராமத்தில் ஜெம்புகேஸ்வரர் கோவில் உள்ளது. இதன் அருகே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அருகிலேயே பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவ-மாணவிகள் சாப்பாட்டு வேளையில், துர்நாற்றத்தால் சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், காட்டுக்குறிச்சி

Tags:    

மேலும் செய்திகள்