குப்பைகள் கொட்டப்பட்டுள்ள குளங்கள் தூர்வாரப்படுமா?

குப்பைகள் கொட்டப்பட்டுள்ள குளங்கள் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-31 18:45 GMT

பொதக்குடியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள குளங்களை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளங்கள்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் நீர் ஆதாரங்களை கொண்டு தேக்கி வைக்க பல குளங்கள் உள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் அங்குள்ள வெட்டுக்கேணி குளம், அய்யாக்கேணி குளம், ராமன்கேணி குளம், சத்தரத்தடி போன்ற குளங்கள் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்றில் தண்ணீர் வராத கோடை காலங்களில் இத்தகைய குளங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு உதவிகரமாக உள்ளது. மேலும், கோடை காலங்களில் இந்த குளங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டம் குறையாத நிலையை போக்குகிறது.

தூர்வார வேண்டும்

இத்தகைய குளங்கள் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் குளத்தை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகவும், குப்பைகளால் குளங்கள் மூடப்படும் நிலை உருவாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை தூர்வாரி, குளங்களில் முறையாக தண்ணீர் தேக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்