மன்னர் கால முரசு மீண்டும் ஒலிக்குமா?

ராமேசுவரம் கோவில் நடை திறக்கும் போது மீண்டும் மன்னர் கால முரசு ஒலிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-07-09 18:33 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் கோவில் நடை திறக்கும் போது மீண்டும் மன்னர் கால முரசு ஒலிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

ராமேசுவரம் கோவில்

புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுபோல் ராமேசுவரம் கோவிலில் மன்னர்கள் காலத்தில் இருந்தே தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கும் போதும், அது போல் மாலை 3 மணிக்கு நடை திறக்கும் போதும் முரசு ஒலிக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த முரசு பயன்பாடு இல்லாமல் முடங்கி போய் கிடக்கின்றது.

குறிப்பாக அதிகாலையில் மற்றும் பகலில் கோவில் நடை திறக்கும்போது இந்த முரசு அடிப்பதற்கு கோவில் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் இந்த முரசும் பயன்பாடு இல்லாமல் சேதமடைந்து போய் விட்டது.

மீண்டும் முரசு ஒலிக்குமா?

தற்போது மன்னர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட இந்த முரசானது வடக்கு நந்தவன தோட்டத்தில் உடைந்து போன பொருட்களோடு சேர்த்து குப்பைகளோடு குப்பையாக வைக்கப்பட்டுள்ளன.

ராமேசுவரம் கோவிலில் பாரம்பரியமாக இருந்து வந்த கோவில் நடை திறக்கும்போது அடிக்கப்பட்டு வந்த முரசை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து ஒலிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்