சேதமடைந்த தொலைக்காட்சி அறை கட்டிடம் அகற்றப்படுமா?

பூம்புகார் அருகே வானகிரியில் சேதமடைந்த தொலைக்காட்சி அறை கட்டிடம் அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-05-03 18:45 GMT

திருவெண்காடு:

பூம்புகார் அருகே வானகிரியில் சேதமடைந்த தொலைக்காட்சி அறை கட்டிடம் அகற்றப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தொலைக்காட்சி அறை கட்டிடம்

பூம்புகார் அருகே வானகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தோசைகுளம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்களுக்கு தொலைக்காட்சி வசதி வேண்டி ஒரு தொலைக்காட்சி அறை கட்டிடம் கட்டப்பட்டது. காலப்போக்கில் தொலைக்காட்சி பெட்டிகள் வீடுகள் தோறும் அலங்கரிக்க தொடங்கின. இதனால் பொது தொலைக்காட்சி சேவை மறைய தொடங்கியது. ஆனால் இதற்கென கட்டப்பட்ட கட்டிடங்கள் ஆங்காங்கே காட்சி பொருளாக இன்றளவும் விளங்குகிறது.

அகற்ற வேண்டும்

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில் வானகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தோசைகுளம் கிராமத்தில் பொதுமக்களின் வசதிக்காக பொது தொலைக்காட்சி அறை கட்டிடம் உள்ளது. தற்போது அந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கிராமத்தில் சாலையை ஒட்டி அந்த கட்டிடம் காணப்படுவதால் எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இந்த கட்டிடத்தின் அருகே குழந்தைகள் மற்றும் மாணவர்கள் அடிக்கடி சென்று விளையாடி வருகின்றனர். மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் ஓரத்தில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி அறை கட்டிடத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்