சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-29 18:45 GMT

வடகோவனூரில் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த ரேஷன் கடை

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூரில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது. இங்கு அரிசி, துவரம் பருப்பு, ஆயில், சீனி, மண் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த ரேஷன் கடை கட்டிடம் விரிசல்களுடன் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் மழைநீர் உள்ளே சென்று பொருட்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. மேலும் சாலையையொட்டி ரேஷன் கடை உள்ளதால் சாலைகளிலேயே நின்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளது.

சீரமைக்க வேண்டும்

எனவே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். மேலும் பொருட்கள் வாங்க சவுகரியமாக இட வசதி அமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்