குண்டும், குழியுமான ஓடக்கரை சாலை சீரமைக்கப்படுமா?

குண்டும், குழியுமான ஓடக்கரை சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்

Update: 2023-01-16 18:45 GMT

திருக்கடையூர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கரை கிராமத்தில் இருந்து திருக்கடையூர் செல்லும் தார்சாலை மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த சாலை சேதமடைந்துள்ளது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டு்ம், குழியுமாக காட்சி அளிக்கும் ஓடக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்