வழிகாட்டி பலகைகள் வைக்கப்படுமா?
வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆலத்தூர் கேட். பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆலத்தூர் கேட்டில் இருந்து பால தண்டாயுதபாணி சுவாமி கோவில், செட்டிகுளம் பத்திரப்பதிவு அலுவலகம், செட்டிகுளம் மாவட்ட முக்கியசாலை, மாவிலங்கை, தேனூர் வழியாக புத்தனாம்பட்டிக்கு சாலை செல்கிறது. சாலை ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து செட்டிகுளம், மாவிலங்கை ஆகிய இடங்களில் வழிகாட்டி பலகைகள் இல்லை. எனவே பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினர் ஆலத்தூர் கேட் பகுதியிலும், செட்டிகுளம் கடைவீதி பகுதியிலும், புத்தனாம்பட்டி குறித்த வழிகாட்டி பலகைகள் வைத்துக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.