அரியலூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் முட்புதர்கள் அகற்றப்படுமா?

அரியலூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் முட்புதர்கள் அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2022-07-10 23:25 IST

அரியலூரில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சாலையின் மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கும், மின் மயானத்திற்கும் பொதுமக்கள் சென்று வருவதற்காக ரெயில்வே துறை சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அதில் சிறிய கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தில் இருபுறமும் மன்சாலையாகவே உள்ளன. லேசான மழை பெய்தாலே பாலத்தில் உள்ளே முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் மழைக்காலங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே தவறி விழுந்து விடுகின்றனர். தற்போது அந்த பாதையின் இருபுறமும் கருவேல முட்கள் அடர்ந்து வளர்ந்து பாதையை மூடி வருகிறது. பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் முழுமையாக போடப்படாததால் இந்த சுரங்கப்பாதை வழியாகத்தான் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே இந்த பாதையை ரெயில்வே அதிகாரிகள் சரி செய்வதுடன், முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்