கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

சிவகாசி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-16 20:02 GMT

சிவகாசி, 

சிவகாசியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய தாலுகாவில் உள்ள 2 லட்சம் தொழிலாளர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இங்கு வருபவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தொழிலாளர்கள் நெல்லை, மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சை பெற சென்று விடுகிறார்கள். இதனால் நவீன வசதிகள் இருந்தும் நோயாளிகளுக்கு அந்த வசதிகளை வழங்க தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை தொடர்கிறது. ஆதலால் இந்த மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Will additional doctors be appointed?

Tags:    

மேலும் செய்திகள்