குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டுயானைகள்

குட்டிகளுடன் சாலையை கடந்த காட்டுயானைகள்

Update: 2023-03-30 18:45 GMT

ஊட்டி

கோடைகாலம் தொடங்கிவிட்டதால், சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி அதிகளவில் காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து காட்டுயானைகள் மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. அதன்படி மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து குன்னூருக்கு காட்டுயானைகள் இடம்பெயர்கின்றன. அவை தண்ணீர் மற்றும் பசுந்தீவனம் தேடி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒருபுறம் இருந்து மறுபுறம் அவ்வப்போது காட்டுயானைகள் கடந்து செல்கின்றன. சமீபத்தில் அவ்வாறு உலா வந்த 3 காட்டுயானைகளை பக்காசூரன் மலைப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குட்டிகளுடன் 7 காட்டுயானைகள் சாலையை கடந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைகள் சாலையை கடந்து சென்ற பிறகே போக்குவரத்து சீரானது.

இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சாலையோரம் முகாமிட்டு இருந்த அந்த காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்