கேரள வனப்பகுதிக்கு இடம்பெயரும் காட்டுயானைகள்

வால்பாறையில் கடும் வறட்சி நிலவுவதால் கேரள வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-12 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் கடும் வறட்சி நிலவுவதால் கேரள வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இடம்பெயரும் காட்டுயானைகள்

வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரத்தில் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதன் தாக்கம் விளைநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையொட்டி தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் செடிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க ஸ்பிரிங்லர் மூலம் தண்ணீர் தெளித்து வருகின்றனர். மேலும் கோடைகாலத்தில் தேயிலை செடிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.இது தவிர வனப்பகுதியில் உள்ள ஆறுகள், நீரோடைகள் உள்பட நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. மேலும் வனப்பகுதி பசுமையை இழந்து வறட்சியாக உள்ளது. இதன் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து வந்த காட்டுயானைகள் கூட்டம் திரும்பி செல்ல தொடங்கி விட்டன.

சுற்றுலா பயணிகள் வருகை

இதற்கிடையில் கடுமையான வெயில் காரணமாக கடந்த 2 வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பள்ளிகளில் பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையிலும், அதற்கு முன்னதாக குழந்தைகளின் மனதுக்கு புத்துணர்ச்சியை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களையும் அழைத்து வந்துள்ளனர். 

இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரித்தது. அவர்கள் சோலையாறு அணை பகுதி, தேயிலை தோட்ட பகுதியில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

எனினும் காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருவதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்