ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

Update: 2023-04-22 18:45 GMT

மேட்டுப்பாளையம்

கோடை வறட்சி காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி வனப்பகுதிக்கு காட்டுயானைகள் இடம்பெயர தொடங்கியுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் சமயபுரம் சாலையை கடந்து குடியிருப்புகள் வழியாக கல்லாறு வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் முகாமிட்டன.

தொடர்ந்து பயிர்களை நாசம் செய்துவிட்டு நேற்று அதிகாலை மீண்டும் குடியிருப்புகள் வழியாக சமயபுரம் சாலையை கடந்து நெல்லிமலை வனப்பகுதிக்கு சென்றன. இந்த பகுதியில் ஏற்கனவே பாகுபலி என்ற காட்டுயானையின் நடமாட்டம் உள்ள நிலையில், தற்போது மேலும் கூட்டமாக யானைகள் வந்து செல்வது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்