ரேஷன் கடையை உடைத்து அரிசி,சர்க்கரையை தின்று சேதப்படுத்திய காட்டு யானைகள்

ரேஷன் கடையை உடைத்து அரிசி,சர்க்கரையை தின்று சேதப்படுத்திய காட்டு யானைகள்

Update: 2023-08-12 20:00 GMT

துடியலூர்

கோவை அருகே ரேஷன் கடையை உடைத்து அரிசி,சர்க்கரையை தின்று சேதப்படுத்திய காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுயானைகள்

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அனுவாவி சுப்பிரமணி சாமி கோவில் மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், மற்றும் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இதில் காட்டுயானைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து வாழை,தென்னை மற்றும் பயிர் வகைகளை தின்றும் சேதப்படுத்தியும் வருகிறது. சில சமயங்களில், இதனால் மனித மோதலும் ஏற்பட்டு விடுகிறது.

அரிசி, சர்க்கரை மூட்டைகள் தேசம்

இந்த நிலையில் சின்ன தடாகம் உஜ்ஜயனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் 2 காட்டு யானைகள் புகுந்தன. ரேசன்கடையின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அரிசி, சர்க்கரை, மற்றும் உப்பு, பருப்பு மூட்டைகளை தின்று சேதப்படுத்தின.இது பற்றி தகவல் அறிந்ததும், ஊர் பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி பட்டாசுகளை வெடித்து, அந்த யானைகளைகாட்டுப் பகுதிக்கு விரட்டி விட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வராத வண்ணம் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் பணியாளர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்