குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகை
கொளப்பள்ளி அருகே குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன.
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே முருக்கம்பாடியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 4 காடடு யானைகள் முருக்கம்பாடி பகுதிக்குள் புகுந்தன. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது வசந்தா என்பவரது வீட்டு முன்பு இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி, சிறிய கூடாரத்தை யானைகள் உடைத்து சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். பிதிர்காடு வன காப்பாளர் கோபு சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் காட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.