சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
புஞ்சைபுளியம்பட்டி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
வனவிலங்குகள் கணக்கெடுப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்குப் பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. மொத்தம் 7 நாட்கள் வனவிலங்குகள் கணக்கெடுக்கப்படுகிறது. இந்த பணியில் வனச்சரகர், வனக் காப்பாளர், வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
நவீன கருவிகள்
10 வனச்சரகங்களுக்கும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த குழுவினர் பகுதி நேர கணக்கெடுப்பு முறையிலும், நேர்கோடு பாதை கணக்கெடுப்பு முறையிலும் கணக்கெடுக்கிறார்கள்.
வனவிலங்குகளின் கால்தடம், எச்சம், மரங்களில் உள்ள கீறல்கள், குட்டையில் உள்ள பகுதிகளில் பதிந்துள்ள கால் தடங்கள் ஆகியவற்றை வைத்து வனவிலங்குகளை கணக்ெகடுக்கிறார்கள். இதற்காக வனத்துறையினர் நவீன கருவிகளை வனப்பகுதிக்குள் எடுத்து சென்றனர்.