கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை

காஞ்சீபுரத்தில் கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-04-01 14:43 IST

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் மடம் தெருவை சேர்ந்தவர் காமாட்சி (42). இவரது கணவர் செல்வம். இவர் கடந்த 29-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கணவர் இறந்த சோகத்தில் காமாட்சி மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வெளியே சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற காமாட்சி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து உயிரிழந்த காமாட்சியின் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காமாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்