மனைவி-குழந்தை கொல்லப்பட்டது அம்பலம்

வெம்பக்கோட்டை அருேக மர்மச்சாவு வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. மனைவி, குழந்தையை கொன்றதாக வாலிபர் சரண் அடைந்தார்.

Update: 2022-06-08 19:59 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருேக மர்மச்சாவு வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. மனைவி, குழந்தையை கொன்றதாக வாலிபர் சரண் அடைந்தார்.

மர்மச்சாவு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் கொத்தாளமுத்து (வயது 28). இவருடைய மனைவி காயத்ரி (27). இவர்களது 4 மாத ஆண் குழந்தை கோகுல் ரக்சன்.

கடந்த மாதம் 25-ந் தேதி மர்மமான முறையில் காயத்ரி மற்றும் அவரது குழந்தை வீட்டின் மாடியில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவான கொத்தாளமுத்துவை போலீசார் தேடி வந்தனர்.

2 பேரை கொன்றேன்

இந்தநிலையில், விஜயகரிசல்குளம் கிராம நிர்வாக அலுவலர் காமராஜிடம் நேற்று கொத்தாளமுத்து சரண் அடைந்தார். இதுகுறித்து அவர் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜூவுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து கொத்தாளமுத்துவிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

காயத்ரி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும் அவர் கலிங்கப்பட்டியிலுள்ள தாயார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதுதொடர்பான தகராறில் ஆத்திரம் அடைந்து காயத்ரியை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், சிறிது நேரத்தில் கோகுல் ரக்சன் அழுததால் குழந்தையையும் ெகாலை செய்தேன் என கொத்தாளமுத்து வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் கூறினர்.

இதையடுத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்