மாவட்டத்தில் பரவலாக மழை: ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் ஓடைகளில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடியது.

Update: 2023-10-11 00:02 GMT

ஈரோடு மாவட்டத்தில் பெய்த பரவலான மழை காரணமாக ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடியில் 33 மில்லி மீட்டரில் மழை பதிவானது.

பெருக்கெடுத்த மழைநீர்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கோடை காலத்தை போலவே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்ததால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

ஈரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்தது. இதனால் பிச்சைக்காரன் பள்ளம், பெரும்பள்ளம் ஆகிய ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூரம்பட்டி அணைக்கட்டிலும் தண்ணீர் நிரம்பி வழிந்தது.

மழை அளவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

தாளவாடி - 33, கொடுமுடி - 30.8, பெருந்துறை, சத்தியமங்கலம் - 27, கோபிசெட்டிபாளையம் - 25.2, பவானி - 21.4, பவானிசாகர் - 16, கவுந்தப்பாடி - 9.2, ஈரோடு - 9, வரட்டுப்பள்ளம் - 8.8, எலந்தகுட்டைமேடு, கொடிவேரி - 6.2, சென்னிமலை - 5, நம்பியூர் - 3

Tags:    

மேலும் செய்திகள்