பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக காலையில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மாலையில் இதமான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கருமேகங்கள் சூழ்ந்து பெரம்பலூர் நகரிலும், குன்னம் தாலுகா வேப்பூர், அகரம்சீகூர், லெப்பைக்குடிகாடு, எஸ்.ஆடுதுறை, அத்தியூர் மற்றும் ஆலத்தூர் தாலுகா பாடாலூர், செட்டிகுளம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரம்பலூர்-12, செட்டிகுளம்- 36, பாடாலூர்-24, அகரம்சீகூர்-68, லெப்பைக்குடிகாடு-43, புதுவேட்டக்குடி-16, எறையூர்-4, வி.களத்தூர்-2, மொத்த மழையளவு 205 மி.மீ. ஆகும். சராசரியாக 18.64 மி.மீ. மழை பெய்துள்ளது.