பனவடலிசத்திரம் பகுதிகளில் பரவலாக மழை
பனவடலிசத்திரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
பனவடலிசத்திரம்:
பனவடலிசத்திரம் பகுதிகளான நரிக்குடி, அச்சம்பட்டி, கூவாச்சிபட்டி, மடத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், பனவடலிசத்திரம், தெற்குபனவடலி, மருக்காலங்குளம் ஆகிய பகுதிகளில் காலையில் கடும் வெயில் அடித்தது.
மாலை 4 மணி அளவில் மேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பரவலான மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.