பாளையங்கோட்டையில் பரவலாக மழை
பாளையங்கோட்டை பகுதியில் பரவலாக மழை பெய்தது.
பாளையங்கோட்டை பகுதியில் நேற்று காலையில் இருந்து வெயில் அடித்தது. மதியத்திற்கு பின்னர் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த மழையால் பாளையங்கோட்டை எல்.ஐ.சி. அலுவலகம் அருகே இருந்த புங்கை மரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.