நெல்லையில் பரவலாக மழை

நெல்லையில் பரவலாக மழை பெய்தது.

Update: 2022-09-25 20:36 GMT

நெல்லையில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. நேற்று பகல் நேரத்தில் வெயில் அனலாக சுட்டெரித்தது. ஆனால் மாலையில் மேக கூட்டங்கள் ஒன்று சேர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 8 மணி அளவில் லேசாக மழை பெய்தது. தொடர்ந்து பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் நெல்லையில் சேதம் அடைந்த ரோடுகள் மற்றும் பள்ளங்களில் மழை தண்ணீர் தேங்கியது. இதேபோல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்