பரவலாக மழை

வேதாரண்யம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

Update: 2022-12-19 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா முழுவதும் இரவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் வேதாரண்யம், தோப்புத்துறை, கள்ளிமேடு, கோடியக்கரை, கோடியக்காடு, அகஸ்தியன்பள்ளி, கருப்பம்புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சம்பா நெற்பயிர்கள் 60 முதல் 80 நாட்கள் வளர்ந்துள்ள நிலையில் தண்ணீர் தேவைப்படும் நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்