பரவலாக மழை

கூத்தாநல்லூரில் பரவலாக மழை;

Update:2023-10-17 00:15 IST

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர். மேலும் கடுமையான வெயிலால் பல இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. இந்த நிலையில் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் கூத்தாநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்