மழைநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணி; மேயர் ஆய்வு

நெல்லையில் மழைநீர் கால்வாய் அகலப்படுத்தும் பணியை மேயர் சரவணன் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-19 19:52 GMT

நெல்லை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்க நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி நெல்லை மண்டலம் 18-வது வார்டு பகுதிகளில் நேற்று ராஜீவ் காந்தி நகர் முதல் ரகுமத் நகர் வரை செல்லும் மழைநீர் கால்வாயை அகலப்படுத்தி, ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

இந்த பணியை மேயர் பி.எம்.சரவணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெருவில் பள்ளிவாசல் அருகில் கழிவு நீரோடையை பார்வையிட்டு அதனை சீரமைக்கவும், அந்த பகுதியில் தெருவிளக்கு அமைக்கவும், அண்ணாமலை நகர் விரிவாக்க பகுதிகளான பி.டி.நகர், ஆசிரியர் காலனி, ரகுமத் நகர், திருமங்கை நகர் பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளை பார்வையிட்டு அவற்றை விரைவில் சீரமைக்க மேயர் பி.எம்.சரவணன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது கவுன்சிலர் சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் பைஜூ, உதவி பொறியாளர் பட்டுராஜன், சுகாதார அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்