இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருப்பது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருப்பது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை,
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள், வள்ளலார் விழாவை கொண்டாடும் அளவிற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதவர்கள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தை மட்டும் கையில் வைத்திருப்பது ஏன்?"
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.