ஜனாதிபதி வேட்பாளர் யார்?- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக திமுக தலைவரும், முதல்-அமைச்சரும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Update: 2022-06-12 06:17 GMT

சென்னை,

இந்தியாவின் 15 வது குடியரசு ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில்,வருகின்ற ஜூலை மாதம் ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள வேளையில்,திமுக 133 எம்எல்ஏக்கள் 34 எம்பிக்கள் பலத்துடன் உள்ளது.இதற்கிடையில்,மேற்கு வங்க முதல்-மந்திரி  மம்தா பானர்ஜி நாடு முழுவதும் உள்ள 22 கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் அவர் கூறியதாவது:"ஜனாதிபதி தேர்தலுக்கு நாம் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.அதற்கு தங்களது கட்சி எம்பிக்கள்,எம்எல்ஏக்களின் பங்களிப்பு வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில்,ஜனாதிபதி  தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின்  முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர்கள் கேஎன் நேரு,பொன்முடி,நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்