சாத்தான்குளத்தில் சூறைக்காற்று:திடீரென சரிந்த செல்போன் கோபுரம்

சாத்தான்குளத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் செல்போன் கோபுரம் திடீரென சரிந்து விழுந்தது.

Update: 2023-06-06 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் செல்போன் கோபுரம் திடீரென சரிந்து விழுந்தது.

செல்போன் கோபுரம்

சாத்தான்குளம்- நாசரேத் சாலையில் உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்தில், பொதுமக்களுக்கு இணையதள சேவை வழங்குவதற்காக தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரம் அக்கட்டிடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்தது.

இதன்மூலம் அந்த தனியார் நிறுவனம், மக்களுக்கு கட்டணத்தில் இணையதள சேவை வழங்கி வந்தது. இதனை மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த கோபுரம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சரிந்து விழுந்தது

இந்நிலையில் நேற்று முன்தினம் சாத்தான்குளம் பகுதியில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் மாடியில் இருந்த செல்போன் கோபுரத்தின் அடியில் உள்ள கம்பி திடீரென உடைந்து பயங்கர சத்தத்துடன் சரிந்தது. அப்போது அருகில் உள்ளவர்கள் அலறி அடித்து ஓடினர். சரிந்த கோபுரம் எதிரே உள்ள வீட்டின் மொட்டை மாடியில் விழுந்தது. இதில் அந்த வீட்டின் ஒரு பகுதி சேதமானது. அந்த பிரதான சாலையில் செல்போன் கோபுரம் கீழே சரியாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தனியார் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்