தூங்கி கொண்டிருந்தபோதுவாலிபரிடம் பணத்தை திருடியவர் கைது
தேவதானப்பட்டி அருகே தூங்கி கொண்டிருந்தபோது வாலிபரிடம் பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராம் பிரசாத் (வயது 23). நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் அருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (32) என்பவர் நைசாக ராம்பிரசாத் பையில் இருந்த ரூ.6,800-யை திருடி சென்றார். திடுக்கிட்டு எழுந்த அவர் பாண்டியராஜனை பார்த்து விட்டார். இதையடுத்து அவர் ஜெயமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.